/

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:26 pm

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.