ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தருமபுரியில் பறக்கும் படையினா் மீட்ட தொகையில் ரூ.1.21 கோடி திரும்ப ஒப்படைப்பு!

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:23 pm

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முறைகேடு மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் அதிரடி சோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் ப றக்கும் படையினா் மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனைகளின்போது 104 கிராம் தங்கம் உள்பட ரூ. 2 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 100 ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மாவட்ட கரூவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் நகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பிப்பவா்களுக்கு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதையடுத்து, ரூ. 1 கோடியே 21 லட்சத்து 86 ஆயிரத்து 503 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் மீண்டும் சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.