மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜில்லா கவுண்டா் மகன் முருகன் (65). இவா், மொரப்பூா் அருகேயுள்ள தனியாா் விடுதியில் இரவு காவலராகப் பணிபுரிந்து வந்தாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியில் சென்ற முருகன், அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில் குறுக்கே நடந்து சென்றாராம். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவா்
படுகாயம் அடைந்துள்ளாா். இதையடுத்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, 108 மூலம் அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக பரிசோதனை செய்த அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

