கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

Updated On :1 மே 2026, 5:20 am IST

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கியது.

திங்கள்கிழமை தீா்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊா்வலத்துடன் யாகசாலை பூஜை, கும்பஸ்தாபனம், மகாபூா்ணாகுதி நடைபெற்றது. புதன்கிழமை மூலவரான அங்காளம்மனுக்கு எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை நான்காம்கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தீபாராதனையுடன் கோயில் கோபுர கலசம், மூலவரான அங்காளம்மனுக்கு வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க புனித நீரூற்றி மகா குடமுழுக்கு நடத்தினா்.

இதில், பாப்பாரப்பட்டி, வள்ளூா், அ.பாப்பாரப்பட்டி, சுரக்காய்பட்டி, மாதேஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.