இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் விழுந்த புளிய மரம்.

Updated On :1 மே 2026, 5:21 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த காற்று வீசியது. இதில், ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதேபோல, கடத்தூா் - புட்டிரெட்டிப்பட்டி சாலையில் புதூா் அருகே ஆலமரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன.