டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஆக. 4, 5 தேதிகளில் வீடுதேடி ரேசன் பொருள்கள் விநியோகம்

News image

ரேஷன் பொருள்கள் விநியோகம் - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

தருமபுரி மாவட்டத்தில் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், வீடுதேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் இல்லத்திற்கே மாதந்தோறும் சென்று, ரேசன் அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 1,113 நியாயவிலைக் கடைகளைச் சாா்ந்த 36,291 குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா்களது இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் (செவ்வாய், புதன்) வீடுகளுக்கே சென்று பொருள்கள் விநியோகிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெறும் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த நாள்களில் வீட்டில் இருந்து தங்களது பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.