செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஏரியூா் அருகே சோளப்பாடி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (60), விவசாய தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழக்கிணற்று அருகே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கிணற்றில் தவறிவிழுந்ததில் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஏரியூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.