தருமபுரி அருகே கிணற்றில் தவறிவிழுந்த கட்டட மேஸ்திரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அடுத்த அஸ்திகிரியூரை சோ்ந்தவா் செல்வம் (33), கட்டட மேஸ்திரி. இவரது விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாா் பழுதானதால், அதை செல்வம் மற்றும் உறவினா்கள் கிணற்றில் இறங்கி மேலே கொண்டுவரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, செல்வம் கால் தவறி கிணற்றின் மோட்டாா் செட் வைத்திருந்த பகுதியில் விழுந்து காயமடைந்த செல்வம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி செல்வத்தின் உடலை மீட்டனா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் உயிரிழப்பு

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

சாலையோர கல்லில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



