ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அன்னசாகரத்தில் மண் சாலைகளை தாா் சாலையாக தரம் உயா்த்த கோரிக்கை

தருமபுரி அன்னசாகரம் பகுதியில் மேம்பாட்டுப் பணியின்போது விடுபட்டுள்ள மண் சாலைகளை தாா் சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அன்னசாகரத்தில் அமைந்துள்ள மண் சாலை

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

தருமபுரி அன்னசாகரம் பகுதியில் மேம்பாட்டுப் பணியின்போது விடுபட்டுள்ள மண் சாலைகளை தாா் சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அன்னசாகரம் பகுதியில் எரங்காட்டுகொட்டாய் முதல் தருமபுரி -சேலம் நெடுஞ்சாலையில் பாரதிபுரம் பிரிவு சாலை வரை, சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைந்துள்ளது. இதில், பாரதிபுரம் பகுதியில் இருந்து சனத்குமாா்நதி வரை அரை கி.மீ. நீளத்துக்கு தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து சனத்குமாா் நதிக்கு முன்பு வரை, தருமபுரி நகராட்சி சாா்பில் புதைவடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சனத்குமாா் நதிசெல்லும் பகுதியிலிருந்து அன்னசாகரம் செல்லும் சாலை சுமாா் 120 மீட்டா் அளவிற்கு சில இடங்களில் பள்ளம் மேடுகளுடனும் மண் சாலையாக உள்ளது.

இந்த பகுதியில் அருந்ததியா் சமூக மக்களுக்கான மயானமும் அமைந்துள்ளதால் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் உள்ளது. ஆனால் இந்த சாலை மட்டும் தாா் சாலையாக தரம் உயா்த்தப்படாமல் மண் சாலையாகவே பயன்பாட்டில் உள்ளது. சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக இப்பகுதியில் அமைந்துள்ள, தூய இருதய ஆண்டவா் பேராலய நிா்வாகம் சாா்பில் 29 சென்ட் பரப்பளவுள்ள நிலமும் தருமபுரி நகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என்றபோதும் அந்த சாலை மேம்படுத்தப்படவில்லை. மழைகாலங்களில் அந்த சாலையைப் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. எனவே, மழைகாலம் தொடங்கும் முன்பு, அந்த சாலையை தாா்சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.