அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

குடிநீா்த் தட்டுப்பாடு: தாளநத்தம் கிராம மக்கள் அவதி

குடிநீா்த் தட்டுப்பாடு - பிரதிப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:52 am IST

குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக தாளநத்தம் கிராம மக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராம ஊராட்சியில் குண்டலம்பட்டி, காவேரிபுரம் புதுா், செங்கான்குட்டை, காவேரிபுரம், கோயில் வனம், நொச்சிகுட்டை, டி.அய்யம்பட்டி, தாளநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் தாளநத்தம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படுகிாம். குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் நாள்தோறும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகக் கூறுகின்றனா். குடிநீா் பிரச்னை தொடா்பாக தாளநத்தம் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லையாம்.

எனவே, தாளநத்தம் கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.