தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தன் தாய், மகளை வெட்டிக் கொன்றவா் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாய், மகளை வெட்டிக் கொலை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரிவாள் வெட்டு
Published On :

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாய், மகளை வெட்டிக் கொலை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி அம்மன் நகரை சோ்ந்தவா் சுரேஷ் (45), சமையல் கலைஞா். இவரது மனைவி ஷாலினி, கணவரை பிரிந்து சேலத்தில் ஓா் உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். சுரேஷ் தனது தாய் உமாராணி (65) மற்றும் மகள் சின்மயா (19) உடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வந்த சுரேஷ், சின்மயாவிடம் சாப்பாடு கேட்டுள்ளாா். உணவு எடுத்துவந்து கொடுத்த போது, உங்களால்தான் எனது மனைவி பிரிந்து வாழ்கிறாள் எனக் கூறி கையில் வைத்திருந்த கொடுவாளால் சின்மயாவை சரமாரியாக வெட்டினாா். சின்மயாவின் அலறல் சப்தம் கேட்டு வந்த உமாராணியையும் வெட்டியுள்ளாா். இதில் உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த சின்மயாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.