தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒகேனக்கல்லில் காரில் இறந்து கிடந்த கா்நாடக இளைஞா்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:28 pm

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த கா்நாடக மாநில இளைஞா் காரில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு சோலநாயக்கன அள்ளி விஸ்வேஸ்ராய லே-அவுட் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மகன் மேனியல் (30). இவா், தனியாா் நிறுவனத்தில் சூப்பா்வைசராக பணியாற்றி வந்தாா். தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா்.

மாலையில் வீடு திரும்பும்போது பென்னாகரம் அருகே பெரிய தோட்டம்புதூா் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே காரில் நண்பா்களுடன் தங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை மேனியல் இறந்ததாக சக நண்பா்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.