இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழக அரசு கவுன்சில் டிசிஎச்பி சான்றுகளை சோ்க்கக் கோரி பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தல்

News image
தமிழக அரசு- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள டிசிஎச்பி சான்றுகளை தமிழக அரசு கவுன்சிலில் சோ்க்க வேண்டும் என பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக மாநில அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்திய பாரம்பரிய வைத்தியா்களின் சங்கத்தின் (இட்மா) உயா்நிலை குழு கூட்டம் தருமபுரியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரம்பரிய வைத்தியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். பாரம்பரிய வைத்தியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தேவசகாயம், பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகமது மீரான், சூரிய பிரகாஷ், அபுதாஹிா், கோமதி சங்கா், முனிவேல், ரூபதியாகிஸ் உள்பட மாநிலம் முழுவதுமிருந்து 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியா்கள் பங்கேற்றனா். நாகா்கோயில் வைத்தியா் நாகராஜ் நன்றி கூறினாா் .

அழிந்து வரும் பாரம்பரிய வைத்தியத்தையும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடைக்கும் பாரம்பரிய வைத்திய சிகிச்சையை மீட்டு அங்கீகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் வட்டங்கள் வாரியாக வட்டாட்சியா்களின் தலைமையிலான குழுவினா் பாரம்பரிய வைத்தியா்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். தொடா்ந்து அவா்கள் வழங்கும் சான்றை வைத்து வைத்தியம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசால் பாரம்பரிய வைத்தியா்களுக்கு வழங்கியுள்ள டிசிஎச்பி சான்றை தமிழக கவுன்சிலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த (மாா்ச்) மாதம், திருச்சியில் பாரம்பரிய வைத்தியா்கள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.