கம்பைநல்லூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

Published on

கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் அப்போது இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் வ. பழனி தலைமை வகித்தாா்.

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் உருவச் சிலையை ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் இணைந்து திறந்துவைத்தனா்.

இந்த விழாவில் பங்கேற்ற பள்ளி ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு விழா குழுவினா் சாா்பில் நினைவு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 1000 க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com