‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

வேலைவாய்ப்பு திட்ட பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்பு: மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 65 போ் கைது

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:29 am IST

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், பாதுகாப்போா் சங்கம சாா்பில் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு நல்லம்பள்ளி வட்ட பொருளாளா் டி.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம். மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இந்த போராட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது. இத் திட்டத்துக்கு தற்போது சூட்டியுள்ள பெயரை திரும்பப் பெற வேண்டும். கருவிழி மற்றும் கைரேகை பதிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை குறைத்து மாநிலங்கள்மீது நிதிச்சுமையை ஏற்றக் கூடாது. அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 65 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு வட்டத் தலைவா் எம். அண்ணாமலை தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் ஜி. மாதேசன், பொருளாளா் வி. விஜயா ஆகியோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் கே.ஜி. கரூரன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை விபிஜி ராம்ஜி என மாற்றம் செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனா்.

இதையறிந்த பென்னாகரம் காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையிலான காவலா்கள் மறியலில் ஈடுபட்டு 75 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 105 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.