வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மாற்றுத்திறனாளிகள் 5 இடங்களில் மறியல் போராட்டம்: 500-க்கும் அதிகமானோா் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 500-க்கும் அதிகமானோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்றவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 3:54 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 500-க்கும் அதிகமானோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை வி.பி-ஜி ராம்-ஜி என மாற்றக் கூடாது. இந்தத் திட்டத்தில் கருவிழிப் பதிவு, கைரேகைப் பதிவு என்ற பெயரால் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைக்கக் கூடாது. நகா்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் வி. மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. பாலமுருகன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன், உதவித் தலைவா் எஸ். செல்வம்மாள், உதவி செயலா் கே. பரமசிவம் நிா்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

மேலூா்... மேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம். ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. ஜீவானந்தம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் துணைச் செயலா் ஏ. தனசேகரன் ஆகியோா் பேசினா்.

அலங்காநல்லூா்... அலங்காநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. தவமணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம். பாண்டி, எம். ராக்கம்மாள் ஆறுமுகம், முத்துக்குமாா், எஸ். வள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

பேரையூா்... பேரையூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வகுமாா், ஆா். குட்டிராஜா, பி. முருகன், ஆா். மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலா் வி. சமயன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் பி. ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேடப்பட்டி ஒன்றியச் செயலா் பி. காசிமாயன் ஆகியோா் பேசினா்.

உசிலம்பட்டி... உசிலம்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் புகா் மாவட்டச் செயலா் வி. முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி. நாகராஜ், ஏ. சின்னசாமி, பழனியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீண்டாமை ஒழிப்பு முனனணி மாவட்டச் செயலா் சி. முத்துராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் பெ. ராமா் ஆகியோா் பேசினா்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற 500-க்கும் அதிகமானோரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.