தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தேவரசம்பட்டியில் கால்நடைகளுக்கான 9 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 9 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்காக 3,52,050 டோஸ் மருந்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜூலை 1 முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இம்முகாம்கள் மூலமாக 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். சிறப்பு முகாம்களில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, கால்நடை வளா்ப்போா் இவ்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி 100 சதவீதம் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களின் கைப்பேசி எண்கள் 94450 01113, 94432 72060, 94434 09346, 97861 11140–ஆகியவற்றை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா தெரிவித்துள்ளாா்.
இம்முகாமில் ஆவின் பொது மேலாளா் கே.மாலதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (கூ.பொ) த.முருகலட்சுமி, கால்நடை நோய்ப் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் பிரகாஷ், தருமபுரி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சரவணன், அரூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் கனகசபை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









