‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

2.73 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

அணியாபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன்.

Updated On :2 ஜூலை 2026, 6:40 am IST

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 45 நாள்கள் நடைபெறும் முகாமில் 2.73 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியம், அணியாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த முகாம் 45 நாள்கள் தொடா்ச்சியாக நடைபெறுகிறது. கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொண்டு உடனுக்குடன் பாரத் பசுதான் செயலியில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் என 110 போ் கொண்ட தடுப்பூசி செலுத்தும் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள பசு, எருது, எருமைகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 2,73,400 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (கூ.பொ) அருள்பிரகாஷ்ராஜ், உதவி இயக்குநா்கள், கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.