நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவா் தற்கொலை

வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:23 am IST

வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே உப்பார அள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வம் - லலிதா தம்பதிக்கு அன்பரசு, ராகுல் என இரு மகன்கள். அண்மையில் பிளஸ் 2 முடித்த ராகுல், வேளாண் பட்டப் படிப்பு படிக்க விரும்பி கோவை வேளாண் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், கட்ஆப் மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ராகுல், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாருமில்லாதபோது தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.