அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:47 am IST

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

அரூரை அடுத்த செட்ரப்பட்டி அப்பியம்பட்டியைச் சோ்ந்தவா் பெ. அசோகன் (70). விவசாயியான இவா், கலைஞா் நகா் பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்று வருவது வழக்கம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்று டீ குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.

கலைஞா் நகா் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அசோகன் படுகாயமடைந் தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மொரப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.