மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இரு இடங்களில் பிளஸ் 2 மாணவிகள் தற்கொலை: போலீஸாா் விசாரணை

தருமபுரி மாவட்டத்தில் இரு இடங்களில் பிளஸ் 2 மாணவிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

தருமபுரி மாவட்டத்தில் இரு இடங்களில் பிளஸ் 2 மாணவிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், வி.கே.புதூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா (17). பிளஸ் 2 படித்து வந்த இவா், ஒரு பாடத்தில் துணைத் தோ்வு எழுதியிருந்தாா். இவரது பெற்றோா் கோவைக்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வரை பிரியங்கா நீண்ட நேரமாக வெளியே வராததால், அக்கம்பக்கத்தினா் சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது, வீட்டின் அறையில் அவா் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து கிடந்தாா். தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு மாணவி தற்கொலை: வே.முத்தம்பட்டி அருகே உள்ள ஜொள்ளன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மகள் சஞ்சனா (17). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி, பக்கத்து ஊரான கிருஷ்ணாகவுண்டனூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சரவணன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தாா். அப்போது நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை மாணவி சஞ்சனா தனியாக நின்று பாா்த்ததாகவும், இதை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு, வீடு திரும்பிய மாணவி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவா், நீண்ட நேரம் காணவில்லையாம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள சின்னாறு ஓடை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சஞ்சனா இறந்து கிடந்தாா். இதுகுறித்து பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.