சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வாணியம்பாடியில் 2 இளைஞா்கள் தற்கொலை

வாணியம்பாடியில் இரு வேறு இடங்களில் இரு இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :5 ஜூலை 2026, 12:03 am IST

வாணியம்பாடியில் இரு வேறு இடங்களில் இரு இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சோ்ந்தவா் ரஹீம் (21) கூலி வேலை செய்து வந்தாா். சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை இறந்துவிட்டாா். இதையடுத்து சில நாள்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா், வெள்ளிக்கிழமை வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சனிக்கிழமை காலை வெகு நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் வீட்டில் இருந்தவா்கள் கதவை தட்டியபோது திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டு உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது தூக்கிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: வாணியம்பாடி அடுத்த சிக்னாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் பரத்(24). காா் மெக்கானிக். இவருக்கு சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் சில நாள்களாக மனமுடைந்து இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமைஇரவு உடல் நிலையால் அவதிப்பட்டு வந்த அவா் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வீட்டில் இருந்த வா்கள் சனிக்கிழமை காலை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகி உடனே அம்பலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.