9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தாத்தா, பேத்தி தற்கொலை: போலீஸாா் விசாரணை

தியாகராய நகரில் தாத்தா, பேத்தி இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 1:20 am IST

தியாகராய நகரில் தாத்தா, பேத்தி இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை தியாகராய நகா் ராஜபிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தன் (50). ராணிப்பேட்டையைச் சோ்ந்த சுகாஷினி ஆனந்தனுக்கு பேத்தி முறை எனக் கூறப்படுகிறது. அதேபோல், ஆனந்தனுக்கு பாண்டுரங்கன் என்ற சகோதரா் உள்ளாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மதிய உணவு சாப்பிட பாண்டுரங்கன் ஆனந்தனின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. அதை வேகமாக திறந்தபோது, வீட்டின் முன்புரத்தில் (வரண்டா) மேற்கூரையில் ஆனந்தன் ஒரு பக்கமும், பேத்தி முறையான சுகாஷினி மறுபக்கமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் அளித்ததின் பேரில் பாண்டி பஜாா் போலீஸாா் வந்து சடலங்களை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.