இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மூக்கனூா் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீ அலா்மேலுமங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:41 am IST

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அக்கமணஅள்ளி, மூக்கனூா் மலையடிவாரத்தில் அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், மேல்தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. பகலில் சுவாமி திருக்கல்யாண வைபமும், மாலை கருட வாகனத்தில் சுவாமி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.