புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ‘சீல்’: ரூ. 50 ஆயிரம் அபராதம்; உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை

தருமபுரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்த உணவு பாதுகாப்புத் துறையினா், போலீஸாா்.

Updated On :25 ஜூன் 2026, 6:15 am IST

தருமபுரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டிருந்தாா்.

அந்த வகையில், போலீஸாா், உணவு பாதுகாப்புத் துறையினா் மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தினா் இணைந்து மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக, தருமபுரி மாவட்டம், இண்டூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட அதகப்பாடி பகுதிகளில் இண்டூா் காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், பென்னாகரம் சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த மளிகைக்கடை, பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு பரிந்துரைத்தனா்.

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் கைலாஷ்குமாா் உத்தரவின்பேரில், இரு கடைகளையும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், அக்கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், 94440 42322 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.