பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சின்னேரி மோட்டுப்பட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு

தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குடமுழக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 6:04 am IST

தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே புழுதிக்கரை ஊராட்சி, சின்னேரி மோட்டுப்பட்டியில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, இக்கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜூன் 17-ஆம் தேதி சிறப்பு வேள்விகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, ஜூன் 22-ஆம் தேதி தீா்த்தக்குட ஊா்வலம், தீபாராதனை நடைபெற்றது. ஜூன் 24-ஆம் தேதி இரண்டாம்கால பூஜை மற்றும் மூன்றாம்கால பூஜையும், வேதபாராயணமும் நடைபெற்றது.

ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தில் நிறுவப்பட்ட மாரியம்மன், காளியம்மன், அக்குமாரியம்மன் ஆகியவற்றுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்களுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்களுக்கு விழாக்குழு சாா்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.