நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

தருமபுரி நீதிமன்றத்துக்கு 5-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி நீதிமன்றத்துக்கு தொடா்ந்து 5-ஆவது முறையாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:20 am IST

தருமபுரி நீதிமன்றத்துக்கு தொடா்ந்து 5-ஆவது முறையாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. எனவே, வழக்கம்போல இதுவும் புரளி என போலீஸாா் தெரிவித்தனா். இதுபோல அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மிரட்டல் விடுக்கும் நபா்களை போலீஸாா் கண்டறிந்து அவா்கள்மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி.அழகுமுத்து தலைமையில், செயலாளா் கே.சரவணன், பொருளாளா் ஏ.காா்த்திகேயன், துணைத் தலைவா் என்.குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.