பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 1:54 am IST

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல், மகளிா் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. வழக்கம்போல வியாழக்கிழமை காலை நீதிமன்றங்கள் செயல்பட்டன.

இந்நிலையில், காலை 10.25 மணிக்கு கோவை மாவட்ட நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மா்ம நபா் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, நீதிமன்ற ஊழியா்கள் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். நீதிமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலமாக சோதனையிட்டனா்.

இதில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.