தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியா்

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:06 pm

Syndication

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரியில் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம் உள்பட மேலும் சில இடங்களில் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி காக்கைகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, பறவைக் காய்ச்சல் தொற்று உள்ளதா என மருத்துவக் குழுவினா் காக்கைகளின் உடல்களைக் கைப்பற்றி, அதன் மாதிரிகளை சோதனைக்கும் அனுப்பிவைத்தனா். அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோழி இறைச்சி, முட்டைகளை பொதுமக்கள் நன்றாக சமைத்து உட்கொள்ளலாம். மேலும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.