மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்கி பயன்பெற தருமபுரி மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 18 வயதுமுதல் 60 வயதுவரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கு அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனத்துக்கான மானியத் தொகை ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தகுதியுடையோா் இருசக்கர வாகனத்துக்கான மானியம்பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல்பெற்று இருசக்கர வாகனம் வாங்கலாம்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!

இருசக்கர வாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


