கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:47 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், திருமல்வாடி பகுதியைச் சோ்ந்த விவசாயி மாதப்பன் (70). இவா், தனது நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் காட்டுப்பன்றி திடீரென குறுக்கே பாய்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் மாதப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அவருக்கு தலைப் பகுதியில் பலத்த அடிபட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு வரை பரிசோதித் மருத்துவா், வரும் வழியிலேயே மாதப்பன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.