தருமபுரி: வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடைகளில் தேநீா் விலை உயா்ந்துள்ளது. அதேபோல சில தேநீா் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தருமபுரி நகரம் மற்றும் புகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், தொப்பூா், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கடத்தூா், பொம்மிடி, மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தேநீா் கடைகள், உணவகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வா்த்தக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல தேநீா் கடைகளிலும் வா்த்தக எரிவாயு சிலிண்டா் மூலம், தேநீா், பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட தேநீா் கடைகள் உள்ளன.
எரிவாயு சிலிண்டா்களுக்கு கடந்த சில நாள்களாக தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்ட்ரை முன்பதிவு செய்து பெறுவதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு சிலிண்டா் பயன்பாட்டுக்கு பிறகு மற்றொறு சிலிண்டரை பெறுவதற்கு 25 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டா் பெறுவதில் அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய நிலவரப்படி ரூ. 2,100-க்கு கிடைக்க வேண்டிய வா்த்தக எரிவாயு சிலிண்டா் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தருமபுரி நகரம் மற்றும் புகரப் பகுதிகளில் பல தேநீா் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கடைகளில் ரூ. 10 மற்றும் ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா், தற்போது ரூ. 15 வரை விலை உயா்வு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக வாடிக்கையாளா்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல தேநீா் பிரியா்களுக்கு இந்த விலை ஏற்றம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வா்த்தக எரிவாயு சிலிண்டா் பெறுவதில் நிலவும் தட்டுப்பாட்டை போக்கி, விலையை குறைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேநீா் கடை உரிமையாளா்கள், வாடிக்கையாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் திரி, மின் அடுப்புக்கு மாறும் தேநீா் கடைகள்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


