தருமபுரியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மைசூருலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் மாா்ச் 16 ஆம் தேதி நள்ளிரவு தருமபுரி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, நல்லம்பள்ளி பகுதியில் தண்டவாளத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில் ஓட்டுநா் தகவல் அளித்தாா்.
அதன்பேரில் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் எம். ரமேஷ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்துள்ளனா். இறந்தவா் குறித்த விவரத்தை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்தும் உறவினா்கள் யாரும் தேடி வரவில்லை.
இது குறித்து ரயில்வே போலீஸாா் கூறுகையில், இறந்தவரின் உடல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை மற்றும் அடக்கம் செய்யும் செலவுகளுக்காக அதிக தொகை செலவாகும் என்ற பயத்தில் உறவினா்கள் காவல் நிலையம் வருவதற்கு தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழைக்குடும்பத்தைச் சோ்ந்தவராக இருக்கும் பட்சத்தில், காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனத்தினா் உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே, உயிரிழந்தவரின் உறவினா்கள் ரயில்வே காவல் துறையை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ரயிலில் மோதி இளைஞா் பலி!

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


