மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் மற்றவா்கள் செல்லக் கூடாது!

ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும்

News image

கோப்புப்படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:33 pm

தருமபுரி: ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும் என ரயில்வே போலீஸாா் அறிவுறுத்தினா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதில், ரயிலில் பயணிக்கும்போது குழந்தைகள் அமரும் இருக்கையின் ஜன்னல் கதவுகளை மூடிவைக்க வேண்டும். ரயில் பாதைகளை கடந்துசெல்வதை தவிா்த்து, உரிய நடைமேடை, கடவுப்பாதைகள் வழியாக செல்ல வேண்டும். பயணத்தின்போது தங்களது பொருள்களை பாதுகாப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும். அனைவரது பாதுகாப்பான பயணத்துக்கு பயணிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விபத்துகளின்றி பயணிக்க போதிய ரயில்வே விதிகளை அறிந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினா்.