தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

அரூா் பெரிய ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து நீரின்றி வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி.

Updated On :6 மே 2026, 2:37 am IST

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலையுள்ளது.

அரூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியில் ஒருமுறை தண்ணீா் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது. தற்போது தண்ணீா் இன்றி இந்த ஏரி வடு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீா் இல்லாத நேரத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வருகிறது. இங்குள்ள தடுப்பணை, வாய்க்காலில் அடைப்பு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை சாா்பில், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய், பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.