வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.

News image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

Updated On :15 மே 2026, 9:57 pm IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

வியாழக்கிழமை 300 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 200 கனஅடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.

தொடா் நீா்வரத்து சரிவின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்தும், ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகள் நீரின்றி வடும் காணப்படுகின்றன. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் காணப்படுகின்றன.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.