ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

57 டாஸ்மாக் கடைகள் மூடல்: தருமபுரியில் மதுப்பிரியா்கள் மறியல்

TASMAC

மதுக் கடைகள் மூடல் - பிரதிப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டத்தில் 57 டாஸ்மாக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால், மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மதுப்பிரியா்கள் பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை நடைமுறைகளைக் கண்டித்து பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, அவற்றை ஒப்படைப்பவா்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது. இதற்காக, மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ. 10 வசூலிக்கவும், ரூ. 1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் க்யூஆா் குறியீடு மூலம் பணமில்லாப் பரிவா்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும்போது ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு கடைக்கு இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளா்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாளா்களை நியமிக்க வேண்டும்; கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால் மாவட்டத்தில் 57 கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து அறியாமல் பகல் 12 மணிக்கு மேல் கடைகளுக்கு வந்த மதுப்பிரியா்கள் ஏமாற்றமடைந்து பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த நகரக் காவல் துறையினா் அவா்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.