புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

தீபாவளி: தருமபுரியில் ரூ. 4 கோடிக்கு மது விற்பனை

மது விற்பனை

Updated On :

தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளில் ஒரே நாளில் ரூ. 4 கோடிக்கு மது விற்பனையானது.

தருமபுரியில் நான்குமுனை சாலை சந்திப்பு, சோகத்தூா், அதியமான்கோட்டை உள்ளிட்ட புகா் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதேபோல, மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 மதுக்கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாளன்று ஒரே நாளில் சுமாா் ரூ. 4 கோடிக்கு மது விற்பனையானது. தருமபுரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 2 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகி வரும் நிலையில், தற்போது பண்டிகை விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் சொந்த ஊா் திரும்பிய நிலையில் கூடுதலாக மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.