தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 20.57 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி ரூ. 20.57 லட்சம் மோசடி செய்தவரைக் கைதுசெய்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
மோசடி

இதுதொடா்பாக அவா்கள் அளித்த மனு விவரம்: தருமபுரி மாவட்டம், இண்டூா் கிராமத்தைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட மக்களிடம் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு பொருள்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை நம்பி, இண்டூா் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் கடந்த 12 மாதங்களாக தீபாவளி சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தோம்.
ஆனால், தீபாவளி பண்டிகையின்போது பொருள்களை வழங்காமல், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் தலைமறைவாகிவிட்டாா். எனவே, அவரைக் கைது செய்து, செலுத்திய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.