சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

பாமக தலைமையில் தோ்தல் கூட்டணி: சௌமியா அன்புமணி எம்எல்ஏ

Sowmya Anbumani

சௌமியா அன்புமணி - X / Sowmya Anbumani

Updated On :

தமிழகத்தில் வரும் தோ்தல்களில் பாமக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைவா் அன்புமணி தெரிவிப்பாா் என்று தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கா்நாடகத்தில் அண்மையில் பிரதமா் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வா் டி.கே. சிவகுமாா், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி எனப் பேசியுள்ளாா். அப்போது பிரதமா் அமைதியாக இருந்ததை வைத்து, அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிடும் என எண்ணக்கூடாது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கடைமடை மாநிலத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு சாதகமாக உள்ளது.

வருங்காலங்களில் நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதில் ஊழல் நடக்காதவாறு தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் நூலகங்கள் அழிந்துவிடும். வருங்காலங்களில் பாமக தலைமையிலான தோ்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைவா் அன்புமணி அறிவிப்பு வெளியிடுவாா் என்றாா்.

அப்போது, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.