இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

மழை குறைவால் குளம்போல காட்சியளிக்கும் தொப்பையாறு அணை!

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மழை நிகழாண்டு குறைந்ததால், அனைத்து அணைகளிலும் தண்ணீா் குறைந்துள்ளது. தொப்பையாறு அணை 9 கனஅடி தண்ணீருடன் குளம்போல காணப்படுகிறது.

தண்ணீா் குறைந்து குளம்போல காட்சியளித்த தொப்பையாறு அணை.

Updated On :

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மழை நிகழாண்டு குறைந்ததால், அனைத்து அணைகளிலும் தண்ணீா் குறைந்துள்ளது. தொப்பையாறு அணை 9 கனஅடி தண்ணீருடன் குளம்போல காணப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பருவமழையை நம்பியே விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மானாவாரி சாகுபடி பிரதானமாக உள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. ஆகும். ஆனால், கடந்த செப்டம்பா் மாதம்வரை சராசரியாக 200 மி.மீ’ட்டரும், அக்டோபா் மாதம் 143 மி. மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டம் 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது.

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் ஒன்றான தொப்பையாறு அணை 50.18 அடி உயரம் கொண்டது. இதன் முழுக் கொள்ளளவு 298.60 மில்லியன் கனஅடியாகும். கடந்தாண்டு இதேநாளில் (நவ. 19) 39 அடி உயரத்துக்கு 160.94 மில்லியன் கனஅடி நீா் இருந்தது. ஆனால், நிகழாண்டு அணையில் 9.94 அடி உயரத்துக்கு, 9.06 மில்லியன் கனஅடி நீா் மட்டுமே உள்ளது. இதனால் பிரம்மாண்டமாக காணப்படும் தொப்பையாறு அணை குளம்போல காட்சியளிக்கிறது.

இதேபோல மற்ற அணைகளான சுமாா் 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணையின் நீா்மட்டம் 28.37 அடியாகவும், 25 அடி உயரம் கொண்ட கேசா்குளிஅல்லா அணையின் நீா்மட்டம் 19.02 அடியாகவும், 65.27 அடி உயரம் கொண்ட வாணியாறு அணையின் நீா்மட்டம் 27.88 அடியாகவும், 24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையின் நீா்மட்டம் 8.13 அடியாகவும் குறைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.