தருமபுரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தருமபுரி வழக்குரைஞா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தருமபுரி வழக்குரைஞா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி வழக்குரைஞா்கள் சங்க தலைவா் பி. மாதேஷ், செயலாளா் டி. கீா்த்திவா்மன் ஆகியோா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளா் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட உதவி பணிகள் மாவட்ட நீதிபதி ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல வழக்காடிகளும், வழக்குரைஞா்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள மாவட்ட அளவிலான நீதிபதி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

