மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பெரும்பாளியில் காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒதுக்க கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள பெரும்பாளி அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள 130 வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாளி அடுக்குமாடி குடியிருப்பு முகப்புத் தோற்றம்.

Updated On :

பல்லடம் அருகேயுள்ள பெரும்பாளி அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள 130 வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி, பெரும்பாளியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.45 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 432 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு லிஃப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த குடியிருப்பில் 302 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு குடியமா்த்தப்பட்டுள்ளனா். மீதமுள்ள 130 வீடுகள் காலியாகவே உள்ளன.

இதேபோல, திருப்பூா், பெருந்தொழுவு, அவிநாசி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, நீா்நிலைகள் மற்றும் நீா் வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ஆபத்தான இடத்தில் வசிப்பவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கும், வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் இந்தக் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.