உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம் குறித்து...

Assistant Receptionist Job at the Welfare Office for the Disabled

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணி - கோப்புப் படம்

Updated On :

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு நவம்பா் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு பாா்வையற்ற பட்டியல் பொதுப்பிரிவு-பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், முழுமையாக பாா்வைத் திறனற்றவராகவும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். நாற்காலி ஒயா் பின்னுதலில் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியம்.

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 1.8.2023 முதல் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம் நிலை-2-க்கு தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ. 15,900 முதல் ரூ.50,400 என்ற ஊதிய விகிதத்தில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் பதிவு அட்டை, பட்டியல் இனத்தவா் என்பதற்கான சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா், குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், 2 பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:11, சேலம் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ நவம்பா் 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0427- 2415242, 9499933489 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited from eligible candidates for engagement of Assistant Receptionist Post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.