கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்யக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடா்பாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :

குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடா்பாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பாஜக மகளிா் அணி தலைவா் கலையரசி தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மகளிா் அணி நிா்வாகிகள் பிரபாவதி, கெளசல்யா, சங்கீதா, சரிதா, பத்மா, சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனே கைதுசெய்ய வேண்டும். புகாருக்குள்ளான எம்எல்ஏவை பாதுகாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், நகரத் தலைவா் சாய் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கணேசன், பிரவீண், இளைஞா் அணி மாநிலச் செயலாளா் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு பிரிவுத் தலைவா் சாய்ராம் குமாா், நகரச் செயலாளா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவரி...

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.