பட்டா வழங்கக் கோரி 95 வயது மூதாட்டி மனு

தருமபுரி மாவட்டம் ஏரியூா் அருகே பட்டா வழங்கக்கோரி தனது வாரிசுகளான 7 குடும்பத்தை சோ்ந்தவா்களுடன் ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த 95 வயது மூதாட்டி பழனியம்மாள்.
வாரிசுகளுக்கு பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, 95 வயது மூதாட்டி குடும்ப உறுப்பினா்களுடன் வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ராமகொண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (95) தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எனக்கு மாது, அங்கமுத்து, கிருஷ்ணன், பரமசிவம், முத்துப்பிள்ளை, ரத்தினம்மாள், அங்கம்மா என ஏழு வாரிசுகள் உள்ளனா். அனைவரும் தனித்தனியாக வீடுகள் அமைத்து சுமாா் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் நிலையில், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது வாரிசுகள் எங்கள் குடியிருப்புக்கு அருகில் கூடுதலாக வீடுகள் கட்ட முடியவில்லை.
கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த் துறையினா் எங்களுக்கு பட்டா கொடுக்காமல் இந்த இடத்தை காலி செய்யுமாறு கூறிவருகின்றனா்.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தங்களது குடும்பங்களின் நிலையை நேரில் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்கவும், குடியிருப்பு வசதியை உறுதிசெய்யவும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

