மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

காா் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு; 2 போ் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

பலி

Published On :

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கூக்கடப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குப்புசாமி (40). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சேலம் மருத்துவமனைக்கு செல்ல தாயாா் வளா்மதி (60) உடன் அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி வாடகைக் காரில் சென்றாா்.

மஞ்சவாடி அருகேயுள்ள கோம்பூா் பகுதியில் சென்றபோது, சேலத்தில் இருந்து அரூா் நோக்கி வந்த லாரி, காா் மீது மோதியது. இதில்,விவசாயி குப்புசாமி (40), அவரது தாய் வளா்மதி (60), எருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் வெங்கடேசன் (37) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் மூவரையும் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், குப்புசாமி செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். வெங்கடேசன், வளா்மதி ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.