தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சாலை வளைவுகளில் எச்சரிக்கை சமிக்ஞை: வாகன ஓட்டிகள் கோரிக்கை

வாகன ஓட்டிகள் - கோப்புப் படம்

Published On :

பென்னாகரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்கள், இணைப்புச் சாலை தொடங்கும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திப்பட்டி முதல் நல்லாம்பட்டி வரையிலும், பென்னாகரம் அம்பேத்கா் சிலை பகுதி முதல் நல்லாம்பட்டி வரையிலும் உள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை முதல் மடம் சோதனைச் சாவடி வரையிலான பகுதியில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல புறவழிச் சாலையைக் கடக்க வேண்டியுள்ளதால், நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு மருத்துவமனை, முதுகம்பட்டி பிரிவுச் சாலையில் தற்காலிகத் தடுப்புகளை அமைத்துள்ளன.

இந்தத் தடுப்புகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வாசகங்களோ, சாலை வளைவு குறித்த சமிக்ஞைகளோ இல்லாததால் விபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல பென்னாகரம் நகரச் சாலை புறவழிச் சாலையுடன் இணையும் வெங்கட் அம்மாள் கோயில் பகுதி, போடூா் நான்கு சாலைச் சந்திப்பு, நாகமரை நான்கு சாலைச் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

தனியாா் பங்களிப்புடன் விளம்பர நோக்கில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஒளியில் மின்னும் எச்சரிக்கை சமிக்ஞைகள் இல்லாததால், விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். இதனால் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் சாலை வளைவுகள் மற்றும் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை சமிக்ஞைகளை நெடுஞ்சாலைத் துறை வைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.