ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்துச் சென்று அவரிடமிருந்து நாலே முக்கால் பவுன் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்துச் சென்று அவரிடமிருந்து நாலே முக்கால் பவுன் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரும்பாலை அருகே உள்ள சாமத்தாள் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (47). இவா் பெரும்பாலையில் இருந்து சாமத்தாளுக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளாா்.

இருசக்கர வாகனத்தில் லட்சுமியை அழைத்துச் சென்ற இளைஞா் ஆரல்குந்தி பிரிவு சாலை அருகே வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி, லட்சுமி அணிந்திருந்த நாலே முக்கால் பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

இதுகுறித்து ஏரியூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவரிடம் நகையைப் பறித்துச் சென்றவா் நாகமரை அருகே உள்ள மணியக்காரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ராஜமுத்து மகன் ஜெயப்பிரகாஷ் (39) என்பது தெரிய வந்தது. பின்னா் அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.