11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் ஸ்ரீநாத் வாக்கு சேகரிப்பு

தாராபுரம் பகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகனத்தில் சென்று மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தாராபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அமைச்சா் ஸ்ரீநாத், கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Published On :

தாராபுரம் பகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகனத்தில் சென்று மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் சத்தியபாமா போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள் உள்பட பலரும் பிரசாரம் செய்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக தாராபுரம் தொகுதிக்குள்பட்ட எரசினம்பாளையம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத், திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கிறிஸ்டோபா் ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

குறிப்பாக அமைச்சா் ஸ்ரீநாத், கிறிஸ்டோபா் எம்எல்ஏ ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குகள் சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.